சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மருத்துவர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூவரும், ராஜீவ்காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தலா இருவரும் உயிரிழந்தனர்.
வானகரத்திலுள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 70 வயதான மருத்துவர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை மற்றும் ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் தலா ஒருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த 16 பேருமே 50 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.