மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கி வீட்டிலிருந்தே இணைய வழியில் பயிற்சி அளிப்பது பற்றி முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கடத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். அதன்பின் நம்பியூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்கள் 200 பேரின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், காய்கறி ஆகியவற்றை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் ஐயாயிரம் பேருக்குத் தென்னிந்தியப் பட்டயக் கணக்காளர் சங்கத்தின் மூலம் இணையத்தளம் வழியாகப் பட்டயக் கணக்காளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.