10, 12வது வகுப்பு தேர்வு எழுத இருக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவர்கள் இருக்கும் ஊரிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 10, 12வது வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெற உள்ளது.
15 ஆயிரம் மையங்களில் தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஊரடங்கால் வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தால், அந்தந்த இடத்திலேயே தேர்வு எழுதலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஜூன் முதல் வாரத்தில் எந்த பள்ளியில் அவர்கள் தேர்வு எழுத முடியும் என்று தெரிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.