தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு உத்தரவை மீறி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
ஊரடங்கு அமலில் இருப்பதால் நாடு முழுவதும் உள்ள கல்விநிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கோபிநாதம்பட்டி கூட்டுரோடு பகுதியில் இயங்கி வரும் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சார் ஆட்சியர் பிரதாப் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் மாணவ,மாணவிகளை கட்டாயப்படுத்தி வரவழைத்து விடுதியில் தங்க வைத்து சிறப்பு வகுப்பு எடுக்கப்படுவது தெரிய வந்த து. இதனை அடுத்து அந்த பள்ளிக்கு சீல் வைக்கும்படி சார் ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து பெற்றோர்களை வரவழைத்த அவர், மாணவ,மாணவிகளை அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.