சென்னையில் ஒரே நாளில் 2 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும் நோய்த்தொற்று பரவி வருகிறது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 பெண் மருத்துவர்கள் உட்பட 3 பேருக்கும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 மருத்துவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மருத்துவருக்கும் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.