சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பு பணிகளுக்கு உதவும் வகையில், 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் கொரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும், கொரோனா தடுப்புக்காக அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக செயல்படுத்தும் வகையிலும் சிறப்பு அதிகாரியாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பணிகளில் உதவும் வகையில் 5 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வடக்கு மண்டலத்திற்கு மகேஷ் குமார் அகர்வாலும், சென்னை கிழக்கு மண்டலத்திற்கு ஆபாஸ் குமாரும், சென்னை தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் பூஜாரியும், சென்னை மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ளவர்கள்.
இதேபோல சென்னை புறநகர் பகுதிகளுக்கு கடலோரப் பாதுகாப்பு குழும டிஐஜி பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.