ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கவும் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஜூன் ஒன்றாம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்கவும் தடை விதித்துப் பிறப்பித்திருந்த இடைக்கால உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து மார்ச் 26ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது அந்த இடைக்கால உத்தரவுகளை ஜூன் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து, நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, இடைக்கால ஜாமீன், பரோல் வழங்கியதையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.