கொரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சென்னையில் அண்ணாசாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இன்றியமையாத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் என்றிருந்த தளர்வைத் தவறாகப் பயன்படுத்திச் சென்னையில் சிலர் வீணாகச் சாலைகளில் அங்குமிங்கும் சுற்றி வருகின்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாகனங்களைப் பறிமுதல் செய்தாலும் போக்குவரத்து குறையவில்லை. இந்நிலையில் சென்னையின் முதன்மையான அண்ணாசாலை முழுவதும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தியாகராய நகர், நந்தனம் ஆகிய இடங்களில் இருந்து அண்ணாசாலை நோக்கி வரும் சாலைகள் அனைத்துமே தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. இதனால் அண்ணாசாலையை ஒட்டியுள்ள மற்ற சாலைகளில் போக்குவரத்து அதிகமாகக் காணப்படுகிறது. உணவு, மருந்து உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மருத்துவ ஊர்திகள் ஆகியவை மட்டும் அண்ணாசாலையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.