நிலத்தடி நீரை எடுக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து 2 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத குடிநீர்ஆலைகளை மூடக்கோரி கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதனடிப்படையில் உரிமம் வழங்க அரசுத் தரப்பில் 3 மாதங்கள் அவகாசம் கோரப்பட்டது.
அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை 2 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், மீறினால் அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரித்தனர்.
தொடர்ந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மார்ச் 30 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.