கொரானா அச்சம் காரணமாக, சென்னையில் இருந்து குவைத் மற்றும் ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரானா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், விமான சேவைகளுக்கு பல்வேறு நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குவைத் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு, கடந்த சனிக்கிழமை தொடங்கி ஒரு வாரத்திற்கு தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து குவைத் மற்றும் ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ, ஏர்இந்தியா, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்களை சேர்ந்த 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.