செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

3 கட்டங்களாக காவிரி-கோதாவரி இணைப்பு.. மத்திய அரசு தகவல்..!

Feb 11, 2020 10:04:37 AM

காவிரி- கோதாவரி நதிகளை இணைக்க விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி- கோதாவரி நதிகள் இணைக்கப்படும் எனவும் இதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். அதன்பின்னர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது, இதுதொடர்பாக கோரிக்கை மனுவையும் அவர் அளித்திருந்தார்.

இந்நிலையில், காவிரி - கோதாவரி நதிகளை இணைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திர மாநில உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக நீர்வளம் மற்றும் சமூகநீதித்துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா அளித்துள்ள பதிலில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். ஒருமித்த கருத்துடன் சட்டபூர்வமான அனுமதியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கட்டாரியா மேலும் தெரிவித்தார்.

காவிரி -கோதாவரி நதிகளுக்கு மூன்று இணைப்புகள் மூலம் தண்ணீரை கொண்டு செல்ல தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் திட்டம் தயாரித்திருப்பதாக கட்டாரியா கூறியுள்ளார்.

வரைவுத் திட்டத்தின்படி கோதாவரியின் ஜனம் பேட்டையிலிருந்து கிருஷ்ணா- நாகார்ஜுன சாகர் வரை முதலில் இணைக்கப்படும். அங்கிருந்து சோமசீலா - பெண்ணாறு வரை இரண்டாவது கட்டமாகவும், சோம சீலாவிலிருந்து கல்லணை வரை மூன்றாவது கட்டமாகவும் இணைக்கப்படும்

இதன் மூலம் கோதாவரியிலிருந்து நாகார்ஜுனா சாகருக்கு 247 டிஎம்சி தண்ணீரை திருப்பி விடவும், பின்னர் அங்கிருந்து தேவைக்கு ஏற்ப தெற்கே கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக காவிரி படுகைக்கு தண்ணீரை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 2018 -19-ஆம் ஆண்டின் கணக்கின்படி 60 ஆயிரத்து 361 கோடி ரூபாய் செலவாகும் என தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement