கிரிப்டோ கரன்சி, பிட் காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இவற்றின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குப்படுத்துவதற்கு எந்த ஒரு அரசு சார்ந்த அமைப்பும் இல்லை என்பதால், இதில் ஏமாற்றப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு அரசாங்க அமைப்பிடமிருந்தும், தங்களுக்குரிய நிவாரணத்தை பெற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிரிப்டோ கரன்சியை வாங்குபவர், விற்பவர் மற்றும் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர் என அனைவரும் குற்றவாளிகளாகவே கருதப்படுவர் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.