பிரபல ஐ.டி. (IT) நிறுவனமான காக்னிசென்ட், (Cognizant) இந்த ஆண்டு 20 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதால், அவற்றை ஈடுகட்டும் வகையில் வழக்கத்தை விட 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தப் போவதாக காக்னிசென்ட்தெரிவித்துள்ளது.
வளாக நேர்காணல் வழியாக தேர்வாகும் பட்டதாரிகளின் சம்பளத்தை 18 சதவிகிதம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு, வருடாந்திர சம்பளம் நான்கு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும். ஐ.டி. துறையில் (IT) கடந்த ஆண்டு நிலவரப்படி 2 லட்சம் பணியாளர்களுடன் காக்னிசென்ட் இரண்டாம் இடத்திலும், 4 புள்ளி 4 லட்சம் பணியாளர்களுடன் டிசிஎஸ் (TCS) முதல் இடத்திலும் உள்ளன