காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததையொட்டி, பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை சந்தித்த விவசாயிகள், பூங்கொத்து அளித்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
அப்போது, அறிவிப்பிற்கான சட்டத்தை விரைந்து இயற்றி அதற்கு செயலாக்கம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர் பாண்டியன், தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும், மத்திய அரசு அதற்கு மதிப்பளித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.