போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 14ம் தேதி சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்த செந்தில்பாலாஜிக்கு, நீதிபதி ஆதிகேசவலு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கினார். காவல்துறை சார்பில் நோட்டீஸ் கொடுத்த அன்றைய தினமே முன் ஜாமீன் வழங்கியது குறித்து தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்ட நிலையில், திருத்த மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு அனுமதி அளித்த நீதிபதி, வரும் 14ம் தேதி செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.