செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

குரூப்-4 தேர்வு முறைகேடு.. தொடரும் கைதுகள்..!

Feb 10, 2020 09:08:52 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு விஏஓ தேர்விலும் முறைகேடு அம்பலமாகியுள்ளது. அந்த வகையில், வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டம் அரியூரை சேர்ந்த நாராயணன் என்கிற சக்தி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் நால்வர் முறைகேடு செய்து பணியாற்றி வருவது தெரியவந்தது.. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், சென்னை அரும்பாக்கம் செந்தில்ராஜ் என்கிற கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரோக்கர் ஜெயக்குமாரிடம் தலா 7 லட்ச ரூபாய் பணம் கொடுத்து பணியில் சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனின் போலீஸ் காவல் முடிவுற்றதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஓம்காந்தனுக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த 3 தனியார் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விடைத்தாள் பண்டல்கள் அனுமதிக்கப்பட்ட காரில் செல்லும்போது, மற்றொரு காரில் வந்த இடைத்தரகர் ஜெயக்குமார், சினிமா சேசிங் பாணியில், மாற்றி எடுத்துச் சென்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சிபிசிஐடி தரப்பு கூறியிருக்கிறது. 

இதற்கிடையே, இடைத்தரகர் ஜெயக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் கூறியுள்ளன. தேர்வர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தேர்வில் முறைகேடு செய்த விவரங்களையும் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட எரிசக்தி துறை ஊழியர் திருக்குமரனை, 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு திமுக காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடி என்றும், தற்போது அதிமுக அரசு அதை களையெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 


Advertisement
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை
கொடைக்கானல் ஏரிச்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டெருமைக் கூட்டம்

Advertisement
Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!


Advertisement