குரூப் 4 தேர்வு முறைகேடு திமுக காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடி என்றும், தற்போது அதிமுக அரசு அதை களையெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடர்பாக மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் ஐயப்பன் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும், அவர் திமுகவை சேர்ந்த அப்பாவுவின் நெருங்கிய நண்பர் என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.