வருகிற 2022ம் ஆண்டில் நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டமாக ரோபோவை அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
கரூரில் ஜே.சி.ஐ கரூர் டைமண்ட் இளைஞர் பாசறையின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், நிலவின் காலநிலை, கதிர்வீச்சு மற்றும் தட்பவெப்பம் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்த பின்னரே மனிதன் அங்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும் கூறினார்.