காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க போவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார்.
தான் ஒரு விவசாயி என்பதை உறுதிப்படுத்தியுள்ள முதலமைச்சர் விவசாயிகளின் பாதுகாவலனாக உயர்ந்திருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்பு மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வராது என்ற அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.