பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள் அமைக்க நிதி ஒதுக்கி தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 10,024 சத்துணவு மையங்களுக்கு 5 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தோட்டக்கலை அலுவலர், வேளாண் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், விவசாயிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக் குழுக்களை அமைத்து அவற்றின் ஆலோசனைப் படி காய்கறித் தோட்டத்தை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி தேசிய பசுமை மாணவர் படையினரைக் கொண்டு கண்காணித்துப் பராமரிக்க தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பாக பராமரிக்கப்படும் காய்கறித் தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.