பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை கொண்டு வந்து திமுக அரசு செய்த தவறை அதிமுக அரசும் செய்யக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடலூரில் அமெரிக்காவின் ஹால்தியா நிறுவனம் சார்பில் 50 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஏற்படும் நம்மைகளை விட தீமைகளே அதிகம் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் நாகர்ஜூனா நிறுவனம் சார்பில், கடலூரின் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றும், நாகர்ஜூனா நிறுவனம் திவாலானதால் திட்டம் கைவிடப்பட்டு கடலூர் தப்பித்தது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.