குரூப் 2 தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
2018-ம் ஆண்டு நடந்த குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வாணையம் அண்மையில் வெளியிட்ட குரூப் 2 தேர்வு முடிவுகளில் 1997-ம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்துக்குரியதாக உள்ளது என தகவல் வெளியானதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் தவறு எதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று ஒருங்கிணைந்த என்ஜினியர் பணிகளுக்கான தேர்விலும் எந்த தவறும் நிகழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.