செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு....? 14 காவல் அதிகாரிகள் மீது வழக்கு...!

Feb 09, 2020 11:16:44 AM

காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, சென்னையில் காவல் அதிகாரிகளின் வீடுகள் உட்பட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். முடிவில், 14 காவல் அதிகாரிகள் மீதும், 2 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி அப்போதைய டிஜிபிக்கு, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார். 2017-18 ம் ஆண்டில் காவல்துறையை நவீனமயமாக்க 47 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக, 4000 வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்ய 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார் தொடர்பாக, சென்னையில் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வாக்கி டாக்கி ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளின் வீடுகளில் இந்த ரெய்டு நடைபெற்றது.

கீழ்ப்பாக்கத்தில் எஸ்.பி. அன்புச்செழியனின் வீடு, பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் ஏடிஎஸ்பிகள் உதயசங்கர், ரமேஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் பட்டினபாக்கம் காவலர் குடியிருப்பிலும் சோதனை நடைபெற்றது. ஆர்.ஏ.புரம், அடையாறு, புனித தோமையார் மலை உள்ளிட்ட மொத்தம் 18 இடங்களில் இன்று காலை முதல் 10 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், காவல் அதிகாரிகள் 14 பேர் மீதும், 2 தனியார் நிறுவனங்கள் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றிப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement
புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாளையொட்டி வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள்..
கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் - 2 பேர் கைது
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement