டிஎன்பிஎஸ்சி முறைகேடு புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
பழங்குடியின சிறுவனை செருப்பை கழற்றிவிடுமாறு அமைச்சர் கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, வயது முதிர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் உள்நோக்கத்தோடு எதையும் செய்யவில்லை என்றார்.
இதேபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது சொந்த கருத்துகள் என்றும், கட்சியின் கருத்து அல்ல என்றும் பதிலளித்த முதலமைச்சர், அவர் பக்திமான் என்று குறிப்பிட்டார்.
பெற்றோரின் கோரிக்கையை ஏற்று 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்த முதலமைச்சரிடம், 9 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என கேட்கப்பட்டது. எல்லா தேர்வுகளையும் ரத்து செய்து விட்டால் மாணவர்களின் திறனை மதிப்பிடுவது எப்படி என எடப்பாடி பழனிசாமி வினவினார்.