சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் நேற்று கேரளாவில் கைது செயப்பட்ட சையது அலியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் இருந்து சையது அலியை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதத் தலைவன் காஜா மைதீனுக்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பதில் சையது அலி முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் வில்சனை கொலை செய்ய திட்டம் தீட்டுவதற்காக அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு நெய்யாற்றங்கரைப் பகுதியில் சையது அலிதான் வீடு எடுத்துக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
சையது அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள போலீசார் அதனைத் தொடர்ந்து என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.