கடலூர் துறைமுகம் -திருவாரூர் வரை அமைக்கப்பட்டுள்ள மின்பாதை இருப்புப் பாதையில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் யாரும் இருப்புப்பாதை அருகே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த பணிகளை குறித்து நேற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2 நாட்களாக திருவாரூர்-கடலூர் துறைமுகம் வரை மின்பாதை அமைக்கப்பட்டதை ஆய்வு செய்ததில் திருப்திகரமாக உள்ளது என்றார்.