செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விஏஒ தேர்விலும் முறைகேடு..!

Feb 08, 2020 10:21:51 AM

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றவரை கைது செய்துள்ள சிபிசிஐடி, இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருவதாக அறிவித்துள்ளது. 

குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மொத்தம் 32 நபர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் வடமருதூர் மேட்டுக்காலணி கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் 2016ல் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்று பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனக்கு மூன்றரை லட்சம் ரூபாய், தனக்கு தெரிந்த 5 நபர்களுக்கு மொத்தம் 34 லட்சம் ரூபாயை காவலர் பூபதி மூலம் முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரிடம் கொடுத்து முறைகேடு செய்து தன்னையும் சேர்த்து 6 நபர்களை அவர் தேர்ச்சி பெற வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.

மேலும் 2017ல் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் நாராயணன் கூட்டாக சேர்ந்து அவருடைய மனைவி மகாலட்சுமியையும் சேர்த்து 7 தேர்வர்களிடம் இருந்து மொத்தம் 73 லட்சம் ரூபாயை முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் கொடுத்து முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மகாலட்சுமி மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டு, மற்ற 6 தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த இரு வழக்குகளிலும் நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 

இதனிடையே சரணடைந்த முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 10 நாட்கள் அவரை காவலில் எடுக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது தன்னை போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறி ஜெயக்குமார் கண்ணீர் விட்டு கதறினார். எனினும் , 7 நாள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ஜெயக்குமாரிடம் விசாரித்து வருவதாக சிபிசிஐடி அறிவித்துள்ளது.


Advertisement
சுமார் 8 லட்சம் முட்டைகளுடன் மீன்பிடி வலையில் சிக்கிய கல்நண்டு
மேம்பாலம் மீது மழையில் தார் சாலை அமைக்கும் பணி
மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி பலி
ஏறுவதற்க்குள் பேருந்தை இயற்றியதால் கீழே விழுந்த பெண்
ஆளுநருக்கு எதிரான முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் மலிவானவை,தமிழ்தாய் வாழ்த்து குறித்த முதலமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து எல்.முருகன் பேட்டி
2 பேக்கரிகளில் வைக்கப்பட்டிருந்த 8,000 அழுகிய முட்டைகள்
கோவையில் பெண்ணை வீடியோ எடுத்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
மழைநீர் தேங்கியுள்ள கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கப்பாதை
திடீரென நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகள்
வேலூர் மாநகராட்சி குப்பை வண்டியை சிறைபிடித்த வார்டு கவுன்சிலர்

Advertisement
Posted Oct 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்


Advertisement