ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் தை தேரோட்ட விழா
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் தை தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மட்டுமன்றி பங்குனி, சித்திரை மற்றும் தை தேரோட்டங்களும் சிறப்பு வாய்ந்தவை.
பூபதித் திருநாள் எனப்படும் தைத் தேரோட்ட விழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலாக்கள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா என்ற முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்தனர்.