சென்னை திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகளை நிறுத்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீன்வளத்துறை 242 கோடிரூபாயில் 300 படகுகள் நிறுத்தும் அளவிலான மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதற்கு சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி பெறவில்லை என தொடரப்பட்ட வழக்கில் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரைக் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், துறைமுகப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்து குழு ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.