கன்னியாகுமரி மாவட்டத்தில் நகைகளை டிஸ்பிளேவில் வைத்து பூட்டிச் செல்லும் 3வது நகைக் கடையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பூவங்கோடு பகுதியில் பரமசிவன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் பூட்டை உடைத்து டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த 54 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
தடையங்கள் கிடைக்கா வண்ணம் மிளகாய்பொடி தூவி சென்ற கொள்ளையர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடையில் 150 சவரன் நகையும், 28ம் தேதி ஜெயஸ்ரீ என்ற நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 65 சவரன் நகையை திருடிவிட்டு அவரது கடையில் இருந்த 3 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.
நகைகளை லாக்கரில் வைக்காமல் டிஸ்பிளேவில் வைத்து பூட்டிச் செல்லும் நகைக்கடைகளை குறி வைத்து நடைபெறும் கொள்ளை குறித்து விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.