ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவத்தில், மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் கடந்த 26ஆம் தேதி, அதிகாலை பெட்ரோல் குண்டு வீசும் நோக்கத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்கள், அங்கிருந்த காவலர்கள் விரட்டியதால், அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு சசிகுமார் தலைமையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டிங்கர் குமார், கண்ணன் ஆகிய இரண்டு பேர் தற்போது கைது செய்யப்பட்டனர்.