பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க வரும் கல்வியாண்டிலிருந்து மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தொலைதூர மலைப்பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி பாதியில் நிறுத்தப்படுவதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன்படி வரும் 2020 - 21 கல்வியாண்டில் 1069 தொலைதூர வாழிடங்கள் 124 ஊரக பகுதிகளில் 23 ஆயிரத்து 137 மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு போக்குவரது வசதி மற்றும் மெய்காவல் வசதி செய்து தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.