தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கரூர், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில், அரசு சார்பில் 91 தனியார் நிறுவனங்கள் பங்குபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்பு மேடையில் பேசிய அமைச்சர், சென்னையில் இருந்து வந்திருந்த நிறுவனங்கள் மாணவர்களுக்கு போதிய திறமை இல்லை என கூறியதாக குறிப்பிட்டார். எனவே மாணவர்கள், பட்டப்படிப்புகளோடு நிறுத்திக் கொள்ளாமல் தனித்திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் பேசினார்.