திருவாரூர் அருகே பட்டதாரி ஒருவர், விவசாய நிலத்தில் குட்டை அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டு, நேரடி விற்பனை மூலம் வருமானம் சம்பாதித்து அசத்துகிறார்.
திருவாரூர் மாவட்டம் கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி விவசாயி கணேஷ் கமலக்கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பி, இயற்கை விவசாயத்துடன், அதில் குட்டை அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டார்.
மீன்களுக்கு சோளம், தவிடு, கடலை புண்ணாக்கு, பழங்கள் ஆகியவற்றை உணவாக கொடுத்து, கட்லா, ரோகு, வாவல் போன்ற வகை மீன்களை வளர்த்து வருகிறார்.
சராசரியாக நாளொன்றுக்கு 100 முதல் 150 கிலோ மீன்கள் விற்பதாகவும், பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தில் ஆயிரம் கிலோ விற்பனை செய்து வருமானம் ஈட்டுவதாக கூறும் கமலக்கண்ணன், நேரடியாக விற்பதால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதால் ஆர்வத்துடன் வாங்கிச்செல்வதாக தெரிவித்தார்.