கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுப்பிடித்திருப்பதாக யாராவது கூறினால் நம்ப வேண்டாம் என, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தேனாம்பேட்டை டிஎம்எஸ் கூட்ட அரங்கில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பீலா ராஜேஷ் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரானா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 12 பேர் வீட்டிற்கு திரும்பியுள்ளதாகவும், 7 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.