தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி அதிகாரி என்.சேகர் பதவி உயர்வு பெற்று பணிமாறுதல் ஆனதால், புதிய சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி மஞ்சுளாவை நியமித்து, அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர், மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டவிரோதம் என்று வாதிட்டார்.
இதையடுத்து, தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விசாரணையை 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.