பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை ஒரு தலைவராக புரொஜெக்ட் செய்யும் முயற்சிகள் நடைபெறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில், சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை ரிப்பன் வெட்டி அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
முன்னதாக, தான் படித்த பள்ளி என்பதால், வகுப்பறையை தொட்டு வணங்கினார். பின்னர் புரொஜெக்டர் பலகையில் திருக்குறளை எழுதிய அமைச்சர் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பிரசாந்த் கிஷோர் எந்த வியூகம் கொடுத்தாலும் சரி 2021 தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் என்றார்.