கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழக எல்லையான களியக்காவிளைக்கு வரும் வாகனங்கள் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கேரளாவில் இருந்து களியக்காவிளைக்கு வரும் வாகனங்கள் மூன்று மருத்துவர்கள் அடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகளால் சோதனையிடப்படுகிறது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரச்சுரம் வழங்குவதுடன், வாகனங்களின் சக்கரங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.
அதேபோன்று பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனின் மூலம் காய்ச்சல் இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்பட்ட பின்னரே பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகின்றனர்.
நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.