உலகப் பிரசித்திபெற்ற ஆடல்வல்ல பெருமானாகிய நடராஜமூர்த்தி, உமைய பார்வதி சமேத மூலநாதராக வீற்றிருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜபூஜை, கட யாத்ரா தானம், ஆகியவை நடைபெற்றது. மூலநாதர் உமைய பார்வதி அம்பாளுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, 20 ஆயிரம் உத்திராட்சங்களால் பந்தல் போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து காலை 9.40 மணிக்கு மூலநாத சுவாமி விமானம் மற்றும் பரிவார மூர்த்தி சன்னதி விமானங்களுக்கும், புனித நீர் ஊற்றி பொது தீட்சிதர்களால் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம், பாடப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் கண்டு சுவாமியை வழிபட்டனர்.
Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8