திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 250 ரூபாய் கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு லட்டு, இலை விபூதி பிரசாதம் வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படை வீடான திருச்செந்தூர் கோயிலில் 250 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் இலை விபூதி அடங்கிய பிரசாதம் வழங்க கோரிக்கை வைத்து வந்தனர்.
இதை நிறைவேற்றும் வகையில் கொடிமரத்தில் வைத்து ஒரு லட்டு, இலை விபூதி வழங்க அறநிலையத்துறை ஆணையர் அனுமதியளித்தார். இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8