செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு : பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Feb 05, 2020 09:57:35 AM

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு, பக்தர்களுக்கு வசதியாக பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த முன்னேற்பாடு பணிகளை தமிழக டிஜிபி திரிபாதி 2வது நாளாக நேரில் ஆய்வு செய்தார்.

பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறவுள்ளதை ஒட்டி, தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடமுழுக்கிற்கு சுமார் 5 முதல் 7 லட்சம் வரை மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரக்கூடிய பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகள் அரசு சார்பில் செய்யப்படுள்ளது.

கோயில் மற்றும் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 275 தண்ணீர் தொட்டிகள் மற்றும் 238 தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காக 100 மருத்துவர்கள், 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 6 மருத்துவக்குழுக்கள், 26 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 28 அவசர சிகச்சை ஊர்திகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தீ விபத்து போன்ற சம்பவங்களை எதிர்கொள்ள, நவீன தீயனைப்பு வாகனம் மற்றும் 5 சாதாரண வாகனங்களோடு, 16 பாம்பு பிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்று திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர கோயிலினுள் நடைபெறும் நிகழ்ச்சிகளை வெளியில் இருந்து காணும் வகையில் எல்.ஈ.டி. திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. கோயில் உள்பகுதி மற்றும் வெளியில் ஏற்கனவே பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களோடு கூடுதலாக 8 அதி நவீன கேமிராக்கள் உள்பட 192 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க தனியாக கட்டுபாட்டு அறையை அமைத்து காவலர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகருக்குள் வரும் முக்கிய சாலைகளில் 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி மற்றும் காவல் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


Advertisement
விமான நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனை... ரூ 4.36 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
கிறிஸ்துமஸ் விழாவை ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்
மின் விளக்கு அலங்காரம், ராட்டினங்களுடன் கண்கவர் திருவிழா... 108அடி நீள அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்
அண்டார்டிகாவின் மிக உயரமான வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண்
உலக உருண்டையை தாங்கி நிற்கும் மர வடிவிலான மனிதன் !... கோவை ஆட்சியர் கிராந்திகுமார் சிலையை திறந்து வைத்தார்
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஒளிரும் சென்னை விமான நிலையம்... பயணிகள் உற்சாகம்
ரகசிய தகவலின் பேரில், லாட்டரி சீட்டு விற்பனையாளர் கைது... ரூ. 2.25 கோடி ரொக்கம் மற்றும் லாட்டரி சீட்டுக் கட்டுகள் பறிமுதல்
மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயங்கள்... மோப்ப நாய்களுடன் சோதனையிட்டு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை
பேருந்து நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நேரில் ஆய்வு செய்தார் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன்... பெண் பொறியாளரை கடிந்துகொண்ட ஈஸ்வரன்
ரத்னகிரி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து... பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி மரணம்

Advertisement
Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்


Advertisement