சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சிலை முன் திரண்ட ராஜா ஆதரவாளர்கள் அவருக்கு மீண்டும் பதவியை வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். திலீப் என்ற நபர் தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றி நெருப்பு வைத்துக்கொள்ள முயன்ற போது, மண்ணெண்ணெய் பாட்டிலை தட்டி விட்டு அவர் மீது தண்ணீர் கொட்டி மற்றவர்கள் அமைதிப்படுத்தினர்.
இதே போன்று சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பும் வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.