சென்னை அடுத்த தாம்பரத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட சாலைகள் முற்றிலும் சேதமடைந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள் தரமற்ற சாலை அமைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
தாம்பரத்தில் உள்ள ராஜேஸ்வரி நகர், வரலட்சுமி தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்பு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்பொழுது மழை பெய்ததால் அப்பணி பாதியிலேயே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஓரளவிற்கு போடப்பட்ட சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு கற்கள் பெயர்ந்து காணப்படுவதாலும், தனியார் கட்டுமான பணிக்காக எடுத்து செல்லும் ஜல்லி மற்றும் மண் சாலைகளில் சிதறியுள்ளதாலும் சிரமத்திற்கு உள்ளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கமிஷனை பெற்றுக் கொண்டு தரமற்ற சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது-