நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர்.
இப்பகுதிகளில் 60 சாயப்பட்டறைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் கழிவுநீர் கால்வாய்களில் திறந்து விடுவதால், அவை காவிரி ஆற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது.