தஞ்சை பெரிய கோவில் குட முழுக்கு விழாவில் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் தெரிவிக்க கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு தனி நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், குடமுழுக்கு விழாவின் போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, சமஸ்கிருத மந்திரங்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளதா, எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார். மேலும் இந்தமனுவை பொது நல வழக்கை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிடவும் தனி நீதிபதி பரிந்துரை செய்தார்.