வங்கி காசோலையில் போலி கையெழுத்து போட்டு, 10 லட்ச ரூபாய் வரை கையாடல் செய்ததாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பெண் கணக்காளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
2 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் சரஸ்வதி என்ற அந்த பெண், கடந்த மாதம் 29ஆம் தேதி இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகராட்சி காசோலையை பணமாக மாற்றுவதற்கு உதவியாளரிடம் கொடுத்தனுப்பியுள்ளார்.
அந்தக் காசோலையை வாங்கிப் பார்த்தபோது, அதில் முன்னாள் நகராட்சி ஆணையாளரின் கையெழுத்து இருந்ததை வங்கித் தரப்பு கண்டுபிடித்தது.
விசாரணையில் முன்னாள் ஆணையர் ஜெகதீஸ்வரியின் கையெழுத்தைப் போட்டு, சரஸ்வதி பணத்தை எடுக்க முயன்றது தெரியவந்தது. தீவிர விசாரணையில் அவர் 10 லட்ச ரூபாய் வரை கையாடல் செய்திருப்பது தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.