தொலைநிலை கல்வி பயின்றவர்களுக்கு, குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு அடிப்படையில் சலுகை வழங்கும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், TNPSC செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில், தமிழ் வழியில் பயின்று வழக்கறிஞராக பதிவு செய்தவருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படாத நிலையில், தொலைநிலைக்கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்வதால், இடஒதுக்கீடு சலுகை வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், இதுபற்றி டிஎன்பிஎஸ்சி செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.