கோவை அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதே பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
நடராஜன் என்ற அந்த ஆசிரியர், அந்த மாணவியை பல நாட்களாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் அவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கோவை பெரியநாயக்கம்பாளையத்தில் பாலிடெக்னிக் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக சக மாணவனான தயாநிதி என்பவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.