மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், மிகச்சிறப்பான நிதிநிலை அறிக்கையை தயாரித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டின் போது, வேளாண்மை குறித்தும், நாட்டின் வளங்கள் பற்றியும், ஔவையாரின் ஆத்திச்சூடியையும், திருக்குறளையும் மேற்கோள்காட்டி உரையாற்றியதால், தங்களை நினைத்து தமிழ் இனமே பெருமை கொள்வதாகவும், நிர்மலா சீதாராமனுக்கு ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.
குறிப்பிட்ட துறை சார்ந்ததாக இல்லாமல், அனைத்துத்துறைகளும், தங்கள் துறைசார்ந்த நிதிநிலை அறிக்கை என பெருமைப்படும் வகையில், நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாக, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.