சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 799 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை திருச்சி மதுரை கோவை என 4 விமான நிலையங்களில் இதுவரை 5543 பயணிகளை சோதனை செய்துள்ளதாக கூறினார். சீனாவில் இருந்து வந்த 646 பேர் உள்பட 799 பேர் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுளள 10 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று அவர் கூறினார்.
இதுவரை தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று கூறிய அமைச்சர், 1642 பாதுகாப்பு உடைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கிங்ஸ் இன்ஸ்டியூட் ஆய்வுக் கூடத்தில், மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் அதன் முடிவுகள் தெரிய வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.